இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவல்:
இன்று தலைநகர் டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள தவுல்கான் பகுதியில் உள்ள ரிட்ஜ் சாலையில் அந்த தீவிரவாதி சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்பே அவரை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.
அவரிடம் பயங்கர வெடி மருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்துள்ளது அவரை பிடிக்கும் பொழுது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் இதனைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.
அந்த தீவிரவாதியிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் அவரின் பெயர் அபூ சுபியான் கான் வயது 36 என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லி உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு குஜராத்,. பஞ்சாப் எல்லையில் 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனை பற்றி கூறுகையில் சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வெளிவந்த செய்திகளில் நாடெங்கிலும் உள்ள இந்து அமைப்புகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக இந்திய அரசு மேற்கொண்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என் ஆர் சி தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கொண்டு வந்து உள்ளதால் அது முஸ்லிம்களுக்கு எதிரானதாக உலகெங்கிலும் கருதப்படுகிறது ஆனால் இதற்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவிக்காமல் உள்ள நிலையில் துருக்கி பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து குஜராத் ராஜஸ்தான் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த வலைத்தளத்தை சப்ஸ்கிரைப் செய்யவும்.



0 Comments