head

காஷ்மீருக்கும் இனி புதுச்சேரி நிலைமைதான்

 காஷ்மீரில் ஆளுநரின் கண் பார்வையில் தான் இனி காஷ்மீரில் ஆட்சி நடக்கும்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிர்வாகத்தை சுமூகமாக நடத்தும் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி காவல்துறை குடிமைப்பணிகள் ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை துணைநிலை ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.




ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.

மேலும் மாநிலம் ஜம்மு காஷ்மீர் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப் பட்டது.



ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இன் கீழ் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

அதாவது ஜம்மு காஷ்மீர் டெல்லி யூனியன் பிரதேசத்தில் 39 துறைகள் இருக்கும்.

வேளாண்மை பள்ளிக்கல்வி உயர்கல்வி பட்டக் கல்வி மலர் வளர்ப்பு தேர்தல் பொது நிர்வாக முறை சுரங்கம் மின்சாரம் பொதுப் போக்குவரத்து பழங்குடியினர் விவகாரம் உள்ளிட்ட துறைகள் அதில் அடங்கும் பொது ஒழுங்கு காவல் துறை குடிமைப்பணிகள் ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை துணைநிலை ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும்.


முதல்வரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளை ஆளுநர் ஒதுக்கீடு செய்வார்.

மேலும் துறை துணைநிலை ஆளுநரின் பெயரில் எந்தத் துறையிலும் பிறப்பிக்கப்படும் செயல்பாட்டு உத்தரவுகள் குடியரசுத் தலைவரின் பெயரில் மேற்கொள்ளப்படும் யூனியன் பிரதேச தேர்தலுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அமைச்சரவை குழுவுக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது.


பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் வழக்கமான அல்லது முக்கிய மற்றவற்றை தவிர மற்ற தகவல்கள் உடனடியாக செயலால் தலைமைச் செயலர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநர் இடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.




எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் துணைநிலை ஆளுநருக்கு அமைச்சரவைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் முடிவுக்கு மத்திய அரசுக்கு பரிந்துரை வைத்து அந்த முடிவின்படி துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



என்னதான் பாதுகாப்பு காரணங்கள் கருதி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசு 370 மற்றும் 35a என்ற காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட சட்டம் சார்ந்த வன்முறையாகக் கருதப்படுகிறது.


மேலும் வடகிழக்கு மாநிலங்களான அவற்றிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் உறுப்பு 371 ஆவது பிரிவு மணிப்பூர் ,மிசோரம் மேகாலயா,நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்துள்ளது.

இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கப்பட்டபோது வடகிழக்கு அந்தஸ்து நீக்கப்படாது என உறுதிபட தெரிவித்து இருந்தார்.


மேலும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுஎன்பது பெரும் வன்முறையானது.


நாகாலாந்து போராட்டக் குழுவினர் இந்தியாவுக்குள் வாழ மாட்டோம் ஆனால் இந்தியாவுடன் வாழ்வோம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் முன்னாள் முதல்வர் முதல்வர் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இன்னும் வீட்டு சிறையில் காவலில் வைக்கப்பட்டு உள்ளது மிகவும் வருந்தத்தக்க கூடியதாக இருக்கிறது.

இதன் மூலம் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் என்று அறியமுடிகிறது.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD