head

லடாக் பகுதியில் சீன அத்துமீறல்

கிழக்கு லடாக்கில் உள்ள பங்காங்டே ஏரி பகுதியில் தென்பகுதி கரையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தின் முயற்சி இந்திய இராணுவத்தினர் முறியடித்து தடுத்து நிறுத்தினர் என்று இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் கிழக்கில் உள்ள ஏரியின் கரைப் பகுதியில் இருக்கும் நிலையான பகுதிகளை சீன ராணுவத்தினர் தன்னிச்சையாக மாற்ற முயன்று அத்துமீறினர் .ஏற்கனவே இராணுவ ரீதியில் 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது மேலும் சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அது பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை குலைக்கும் வகையில் உள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் அறிக்கை வெளியிட்டார்.



கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர் சீன ராணுவத்தின் தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.


பேச்சுவார்த்தை ஒருபுறமிருக்க சீன ராணுவம் அத்துமீறி இருப்பது இந்த நடவடிக்கையின் அமைதியை குலைப்பதாக உள்ளது.

Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD