பீஜிங் சீனாவின் வடக்கு பகுதியில் போ காய் வளைகுடாவுக்கு மஞ்சள் கடலுக்கும் இடையில் உள்ள தென் சீன கடல் பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது சீனாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் உள்ள விமானங்களும் பீரங்கிகளும் கடலில் உள்ள இலக்குகளை குறிவைத்து சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
போர் பயிற்சி நடந்த இந்த இடம் சீனாவின் ராணுவ பகுதி என ஏற்கனவே பிரகடனம் செய்யப் பட்டதாகவும் அதன்படி இந்த பகுதிக்குள் வேறு எந்த நாட்டில் விமானமும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் சீன ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அமெரிக்காவின் யூ டூ ரக உளவு விமானம் நுழைந்தது.
இது தொடர்பாக சீனா அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதாள சுரங்கங்களில் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அதுக்கும் நடவடிக்கையில் சீன ஈடுபட்டுள்ளது.
சீனா கொண்டாடும் தென்சீனக்கடல் பகுதியானது வளம் நிறைந்த மற்றும் கடல் வணிகத்திற்கு மிகவும் பயன்படும் பகுதியாக உள்ளது.
இதற்கு அமெரிக்கா மலேசியா தைவான் வியட்நாம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
தென் சீன கடல் பகுதியில் உள்ள தீவில் சீனாவுக்கு சொந்தமான மிகப்பெரிய யுலின் கடற்படை தளம் உள்ளது.
இந்த பகுதியில் சீனா அணு நீர்மூழ்கி கப்பல்களின் தளமாக பயன்படுத்தி வருகிறது.
இந்த தளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட சாங் 093 ரக அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களை சீனா நிறுத்தி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிளானட் லேப் என்ற செயற்கைக்கோள் நிறுவனம் யுலின்தளத்தில் சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் செல்வதை கடலுக்கு அடியில் செல்வதை படம் பிடித்துள்ளது.
அதாவது ஹாங்காங்கில் இருந்து தென்கிழக்கு திசையில் 300 மயில் அதாவது 470 கிலோமீட்டர் தொலைவில் தீவின் தென்பகுதியில் யுலின் கடற்படைத் தளம் அமைந்துள்ளது.
சீனாவின் ராணுவ ஆயுதங்கள் ரகசியங்கள் பாதுகாக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிரி நாடுகளின் பார்வையில் தான் அது அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் படுவதை தடுக்க இந்த பாதாள கடற்படைத் தளத்தை சீனா நிறுவி.இருக்கலாம்.
அமெரிக்காவை தாக்க புதிய ஏவுகணைகளை சீனா நிறுவியுள்ளது:
தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்க இராணுவமும் அந்த கடலில் தனது விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தி வருகிறது.
இதனால் அந்நாட்டின் மீது சீனா கோபத்தில் உள்ளது இந்நிலையில் போர் பதற்றம் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை தாக்கி அழிப்பதற்காக
DF26B,
DF21D,
என்ற இரண்டு புதிய ஏவுகணைகளை நேற்று ஏவி சோதனை செய்தது.





0 Comments