head

கூட்டு ராணுவ பயிற்சியை புறக்கணிக்க இந்தியா முடிவு31/08/2020

 ஆகஸ்ட் 30 

ரஷ்ய நாட்டில் அடுத்த மாதம் சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டு இராணுவப் பயிற்சியை புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.




ரஷ்யாவின் அஸ்ட்ரகான் நகரில்

செப்டம்பர் 15 முதல் 26ம் தேதி வரை கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா சீனா பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்க இந்தியா முடிவு செய்திருந்தது இந்த நிலையில் இந்த போர் பயிற்சியில் பங்கேற்க போவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது.


இதற்குரிய காரணத்தை தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம் கொரோனா மற்றும் அடுத்தடுத்த கடுமையான சூழல் காரணமாக பங்கேற்க முடியவில்லை என கூறியுள்ளது.




Post a Comment

0 Comments

AMP

BODY

LAST AD