பாஜக விளம்பரத்திற்காக செலவிட்ட தொகையை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற என்ற ஏடுகடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியாவில் ஆளும் பாஜக கட்சியினர் செய்யும் வெறுப்பு பிரச்சாரங்களை முகநூல் நிறுவனம் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஏடு அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது.
ஆளும் அரசாங்கத்தை பகைத்தால் வர்த்தக ஆதாயங்களை இழந்துவிடுவோம் என்று முகநூல் இந்திய குழுவினரை அதன் இயக்குனர் அங்கிதாஸ் மிரட்டி பணிய வைத்தது இதற்கு காரணம் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது கட்டுரையில் தெரிவித்திருந்தது.
மேலும் பாஜக சுய விளம்பரத்திற்காக செலவிட்ட தொகை களை க் காண்போம்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆகஸ்டு 24 வரையிலான இந்த முகநூல் விளம்பர கணக்கில் பாஜக பெயரில் மட்டுமே நேரடியாகவே ரூபாய் 4.61 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர மோடிக்கான எனது முதல் வாக்கு என்ற முகநூல் சமூக வலைதள பக்கத்திற்கு ரூ. ஒரு கோடியே 39 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.
பார் அஸ் தே மன் கி பாத் என்ற முகநூல் வலைதள பக்கத்திற்கு ரூபாய் 2 கோடியே 24 லட்சம் செய்தி மற்றும் ஊடக வலைத்தளமாக வகைப்படுத்தப்பட்ட நேஷன் வித் நமோ என்ற முகநூல் பக்கத்திற்கு ரூ ஒரு கோடியே 28 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் எம்பி எஸ் ஐ எஸ் (செக்யூரிட்டி அண்ட் இன்டல்லைஜன்ஸ் சர்விசஸ்) நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்கே சின்ஹா உடனும் ரூ 65 லட்சம் செலவில் ஒரு வலைதள பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதள பக்கங்களில் முகவரியாக அதாவது பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மார்க் மார்க்,
மின் டோ பிரேச் காலனி வர காமாலை புதுதில்லி 110002
இன்றைய பதிவிட்டுள்ளனர் இது பாஜகவின் தேசிய தலைமையகத்தின் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி முகநூல் விளம்பரங்களுக்கு பாஜக வாரி இறைத்த ஒட்டு மொத்த தொகை ரூ 10 கோடியே 17 லட்சம் என்பது அம்பலமாகி வருகிறது.
முகநூலில் விளம்பரங்களில் மட்டும் முதல் பத்து நபர்களின் விளம்பர செலவு ரூ 15 கோடி 81லட்சம் இதில் 64 சதவீத தொகையை ரூபாய் 10.17 கோடி ரூபாய் மட்டும் பாஜக அள்ளிக் கொடுத்துள்ளது.
வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் ரூபாய் 86 லட்சத்து 43 ஆயிரம் செலவிட்டுள்ளது ஆனால் வர்த்தக வியாபார நிறுவனங்களை காட்டிலும் பத்து மடங்கு அதிகமான தொகையை விளம்பரத்திற்கு பாஜக வாரி இறைத்து உள்ளது.






0 Comments