காஷ்மீரில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.இந்த அரசியல் சாசன சட்டத்தின் 370 மற்றும் 35a பிரிவு ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது.
அதாவது ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் இல்லடா ஒரு யூனியன் பிரதேசம் ஆகவும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.
![]() |
இதனையடுத்து தற்போது ஜம்மு காஷ்மீரில் எதிரில் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி நடத்தும் கட்சி ஒமர் அப்துல்லா நடத்தும் கட்சி மற்றும் பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காஷ்மீர் அந்தஸ்தை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும் என போராட்டம் அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி யும் ஓராண்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் அவரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது. இதனால் இம் மக்களின் அடிப்படை அடையாளம் மாற்றப்பட்டுள்ளது.
இது அரசின் அடக்குமுறைக்கு மக்களை உள்ளாக்கி இதனை செயல்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் உறுப்பு 370-வது பிரிவு நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் மேகாலயா சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நாகாலந்து போராளிகள் கூறுவது என்னவென்றால் நாங்கள் இந்தியாவுடன் வாழத் தயார் ஆனால் இந்தியாவுக்குள் வாழத் தயாரில்லை என கூறி வருகின்றனர்.
மேலும் கஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதங்களில் வாரங்களில் பல ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இவ்வாறு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்.



0 Comments