சென்னையில் கடந்த 2010 ஜனவரி 23 24 ஆகிய தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது சாயி பல்கலைக்கழகம் நிறுவப் அது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எனவே தமிழக உயர்கல்வித் துறை மற்றும் சாயி கல்வி மருத்துவம் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம் இடையே முதல்வர் முன்னிலையில் ஜனவரி 24-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பல்கலைக்கழகம் முதல் கட்டமாக முதல் ஏழு ஆண்டுகளில் ரூ 600 கோடி முதலீட்டில் 12 இலட்சம் சதுர அடிப் பரப்பில் அமைகிறது
இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் 300 பேராசிரியர்கள் நிர்வாகப் பணியாளர்கள் 300 பேரைக் கொண்டு இயங்கும்.
இரண்டாம் கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் சதுர அடி கட்டிடம் பரப்பில் 20,000 மாணவர்கள் ஆயிரம் பேர் ஆசிரியர்கள் 1,000 பணியாளர்களை கொண்டு இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 103.7 ஏக்கர் பரப்பில் சாயி பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது.
இந்த (31/08/2020)
நிகழ்ச்சிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார் இது சுமார் 600 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

0 Comments