புகார்களை பதிவு செய்வதற்கும் தகுந்த ஆலோசனைகளை பெற தகவல்கள் தருவதற்கும் இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
https://www.facebook.com/Chennai.Police/
Facebook I'd: greater Chennai police crime against women
Twitter I'd: Twitter@cawcchennai
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முகநூல் வலைதளத்தில் பிரத்தியேகமாக பொதுமக்கள் புகார் செய்ய ஒரு பக்கத்தினை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
இந்த பிரிவுக்கான அலுவலகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ளது சென்னையில் காவல் மட்டத்தில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த பிரிவு போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த முகநூல் வலைதள பக்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய விழிப்புணர்வு குற்றத்தடுப்பு மற்றும் புகார்களை பதிவு செய்ய பிரத்தியேகமாக முகநூல் டிவிட்டர் ஆகிய கணக்கு தொடர்பு (செயலிகளில் )வழியாக வசதி செய்யப்பட்டுள்ளது.


0 Comments