உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு போர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அறுபது குழந்தைகள் இறந்த போது குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்டவர் டாக்டர் கபில் கான்.
கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி அலி கார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் கபீல் கான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட காலம் ஏப்ரல் மாதம் 16ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதம் காலம் நீட்டிக்கப்பட்டது .இதனால் கபில் கான் கைது எதிர்த்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு உச்சநீதி மன்றம் அனுப்பியது.
Image Credit to the print news
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் kafeel கானை விடுவிப்பது தொடர்பான மனுமீது 15 நாட்களுக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதி மன்றத்தை கேட்டுக் கொண்டிருந்தது.
இதுகுறித்து தற்போது கிடைத்த செய்தி என்னவென்றால் இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் கபில்கானை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் என விமர்சித்து உடன் அவர் பேச்சில் அலிகார் நகரத்தின் அமைதி மற்றும் அமைதியை எங்கும் அச்சுறுத்தவில்லை என குறிப்பிட்டு அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
இந்த சட்டத்தை உத்தரபிரதேச அரசு மதிக்கும் உண்மை என்ன என்றுபின்பு காண்போம்.
0 Comments