குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புகள் உலக அளவில் பரவ தொடங்கிய நிலையில் ,
அண்டைநாடான மலேஷியா வும் இதற்கு தன் கருத்துக்களை தெரிவித்துள்ளது .
அதாவது மாகாதிர் முகம்மதும் இதற்கு தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் . எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என காத்துக்கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு இந்தியாவின் இந்த குடியுரிமைச் சட்டம் கடவுள் குடுத்த வரப்பிரசாதம் போல், கிடைத்த வாய்ப்பை விடுவானேன் என்று எப்படி
காஷ்மீர் பிரச்சனையை எப்படி உலக அளவில் கொண்டு சென்று எதிர்ப்பைக் கிளப்ப நினைத்ததோ ?
அது போன்று , பாகிஸ்தானுக்கு கிடைத்த இந்தியாவின் குடியுரிமைச்சட்டத்தை வெகுவிமர்சியாக கொண்டாட எண்ணி
OIC - ORGANIZATION OF ISLAMIC CO-OPERATION.
இந்த ஓஐசி வில் இந்த பிரச்சனையை தலைதூக்க வைத்து இருக்கிறது பாகிஸ்தான்.
அதாவது உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் ஒரு உறுப்பினராக உள்ளது . இந்த நிலையில் தான் ,
இஸ்லாமாபாத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது .
அதில் இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டு+இருக்கும் , சௌதியின் நிலைப்பாட்டைப் பற்றித் தெரியவில்லை .,,
அதில் சில முக்கியமான சில விவாதங்களை நடத்த விருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது..
இதற்கு துருக்கி ஆட்சேபனைத் தெரிவித்து இருக்கிறது இதனுடன்
கத்தார். மற்றும் இன்னும் சில இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் சர்ச்சையின்போது எப்படி இது உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா நின்றதோ அதேநிலைப்பாட்டில் தான் தற்போதும் இந்தியா நிற்கும் என்று தெரிகிறது.
ஆனால் சில சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் மற்றும் இதில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் என்று கூறுகிறார்கள் .



0 Comments